பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

※ 262 岑 இராமலிங்க அடிகள் உரிமையுற்றேன் உமக்கேஎன் உள்ளம்அன்றே அறிந்திர் உடல்பொருள்ஆ விகளைஎலாம் உம்மதென்னக் கொண்டீர் திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ சிவகாம வல்லிமகிழ் திருநடநாயகரே (4) எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே எல்லாம்செய் வல்லவனே என்தனிநா யகனே இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்.இவ் வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும் மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம் வாய்த்தது.சிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில் விதுதருன அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும் வேலை.இது காலைஎன விளம்பவும் வேண் டுவதோ (7) அன்றெனக்கு நீஉரைத்த தருணம்.இது எனவே அறிந்திருக்கின் றேன்.அடியேன் ஆயினும்என் மனந்தான் கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற தரசே கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம் பொன்றிடப்பேர் இன்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில் புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின்று எழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே (9) இந்த நான்கு பாடல்களையும் படித்து வள்ளல் பெருமான் அடைந்த அநுபவத்தை நாமும் பெறுவோ #f}fóる。 31. உண்மை கூறல்: பத்துப் பாடல்களைக் கொண் டது இப்பதிகம்; அனைத்தும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. தாம் எம்பெரு மானுக்கு ஆட்பட்டிருக்கும் உண்மையைக் கூறுதல் இப் பதிகப் பொருள். ஞான சம்பந்தப் பெருமானைப் போல் நம் அடிகளும் தாம் கூறுவனவற்றை இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுதலை இப்பதிகத்தில் கண்டு மகிழலாம். பாடல்கள் யாவும் அருட்பெருங்சோதியிர் ஆணைநும் மீதே என்று இறுவதையும் காணலாம்.