பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 器 265 案 இன்பெலாம் அளிக்கும் இறைவனே என்னை ஈன்றநல் தந்தையே தாயே அன்பெலாம் ஆகி நிறைந்தோர் நிறைவே அண்ணலே இனிப்பிரி வாற்றேன் பொன்பதந் தருதற் கிதுதகு தருணம் புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே (6) ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத் தென்னையாட் கொண்டெனை உவந்தே ஒதும்இன் மொழியால் பாடவே பணித்த ஒருவனே என்னுயிர்த் துணைவா வேதமும் பயனும் ஆகிய பொதுவில் விளங்கிய விமலனே ஞான போதகம் தருதற் கிதுதகு தருணம் புணர்ந்தருள் புனர்ந்தருள் எனையே (7) இந்த நான்கு பாடல்களையும் என்புருகப் பாடி அநுபவித்தால் வள்ளல் பெருமான் இறைவனுடன் கலந்த கலப்பு நமக்கும் கிட்டும் என்பது உறுதி. 35. சிவயோக நிலை: பத்து நேரிசை வெண்பாக்கள் அடங்கிய இப்பதிகம் வள்ளல் பெருமானின் சிவாது பவத்தைக் காட்டுவது. பாடல்கள் யாவும் கதவைத் திற’ என்று இறுவன. மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே பதிமண் லத்தரசு பண்ண - நிதிய நவநேய மாக்கும் நடராச னேயெஞ் சிவனே கதவைத் திற. (1) சாகா அருளமுதம் தான்.அருந்தி நான்களிக்க நாகா திபர்குழ் நடராசா - ஏகா பவனே பரனே பராபரனே எங்கள் சிவனே கதவைத் திற, (3)