பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

激 266 邻 இராமலிங்க அடிகள் எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளும்சொல் நல்லார் அமுதமது நான்அருந்த - நல்லார்க்கு நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு செல்வா கதவைத் திற, (6) ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே ஞான அமுதமது நான்அருந்த - ஞான உருவே உணர்வே ஒளியே வெளியே திருவே கதவைத் திற. (8) சோதிமலை மேல்வீட்டில் தூய திருஅமுதம் மேதினிமேல் நான்உண்ண வேண்டினேன் - ஒதரிய ஏகா அனேகா எழிற்டொதவில் வாழ்ஞான தேகா கதவைத் திற. (10) எல்லா உருவங்களினும் அடிகள் அதிகமாக ஈடு பட்டது. நடராச வடிவத்தில், எல்லாத் திருவுருவங்களி லும் நடராசத் திருஉருவம் சிறப்பு வாய்ந்தது. இதன் கலைச் சிறப்பில் மேலை நாட்டவரும் சிந்தையைப் பறிகொடுத்துள்ளனர். நடராசத் திருவுருவம் கலைச் சிறப்பாலன்றித் தத்துவச் சிறப்பாலும் உயர்ந்தது. பேரா இயற்கையின் ஒயா இயக்கமே ஆண்டவனின் திருக் கூத்து. இத்திருக் கூத்தின் தத்துவங்களைக் காட்டுவதே நடராச வடிவம். நடராசத் திருவுருவத்தில் திருவாசி ஓங்காரத்தைக் குறிப்பது. இத்திருவாசியிலுள்ள சுடர்கள் (தீக்கொழுந் துகள்) எழுத்துகளாம். . ஓங்கார மேநல் திருவாசி உற்றதனில் நீங்கா எழுத்தே நிறைசுடராம் - ஆங்காரம் அற்றார் அறிவர்அணி அம்பலத்தான் ஆடலிது பெற்றார் பிறப்பற்றார் பின், - உண்மை விளக்கம் - 34. மற்ற திருவுருவங்களில் திருவாசி தனியாக இருக்கும்.