பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 密 267 密 கூத்தப் பெருமான் திருவுருவில் அமைந்த திருவாசி திருவுருவோடு சேர்ந்தே இருக்கும். இவ்வாறு தத்துவத் தாலும் கலைச் சிறப்பாலும் சிறந்த இந்நடராசத் திருவுரு வம் தமிழ்நாட்டிற்கே உரியது. நடராச வடிவத்தைக் கண்டவர்கள் தமிழர்களே. வடநாட்டுத் திருக்கோயில் களில் நடராசர் திருவுருவம் இல்லை. சபைகள் ஐந்தும் தென்தமிழ் நாட்டில் இருப்பதும் கருதத்தக்கது. இந்தத் தத்துவத்தை நினைவுகூரும் வகையில் இந்த ஐந்து பாடல்களையும் உளங்கொண்டு ஒதிப் பயன் பெறுதல் நம்மனோர் கடன். 36. பெற்ற பேற்றினை வியத்தல்: பத்துப் பாடல்கள் அடங்கிய இப்பதிகம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் ஆனது. அடிகள் தாம் இறைவ னிடம் - தில்லைக் கூத்தனிடம் - பெற்ற பேற்றினை நினைந்து உள்குழைந்து ஓதி உவக்கின்றார் இப்பாடல் களில். அவற்றுள் இவை ஐந்து பாடல்கள்: சீரிடம் பெறும்ஒர் திருச்சிற்றம் பலத்தே திகழ்தனித் தந்தையே நின்பால் சேரிடம் அறிந்தே சேர்ந்தனன் கருணை செய்தருள் செய்திடத் தாழ்க்கில் யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன் யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன் போரிட முடியாதினித்துய ரொடுநான் பொறுக்கலேன் அருள்கஇப் போதே (2) தந்தைநீ அலையோ தனயன்நான் அலனோ தமியனேன் தளர்ந்துளம் கலங்கி எந்தையே குருவே இறைவனே முறையோ என்றுநின் றோலிடு கின்றேன் சிந்தையே அறியார் போன்றிருந் தனையேன் சிறியனேன் என்செய்வேன் ஐயோ சந்தையே புகுந்த நாயினில் கடையேன் தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரே (3)