பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 苓 271 缘 பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஒர் பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம் செச்சைமலர் எனவிளங்கும் திருமேனித் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம் (6) சத்தியமாத் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம் சக்திகள்எல் லாம்விளங்கத் தானோங்கும் செய்வம் நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம் பக்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாம் பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம் சித்தினலாம் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம் (10) இந்த மூன்று பாடல்களையும் மும்மூர்த்திகள் எனக் கருதிப் பாடி அநுபவித்தால் வள்ளல் பெருமான் குறிப் பிடும் அத்தெய்வம் நம் மனத்திரையில் மறையாது காட்சி தந்து கொண்டிருக்கும். 42. பேரானந்தப் பெருநிலை: பத்துப் பாடல்களைக் கொண்ட இப்பதிகம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் அமைந்து வள்ளல் பெருமான் எய்திய பேரானந்தப் பெருநிலையை விளக்குவதாக அமைந் தது. பாடல்கள் யாவும் 'எனக்கே, பழுத்தபேராந்தப் பழமே” என்று இறுவன. அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும் ஆனந்த போகமே அமுதே மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே மன்னும்என் ஆருயிர்த் துணையே துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே தூயவே தாந்தத்தின் பயனே பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்தபே ரானந்தப் பழமே (1)