பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岑 2了4 举 இராமலிங்க அடிகள் மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து மன்அதி காரம்ஐந் தியற்றத் தேசுசெய் தணிபொன் அம்பலத் தாடும் என்பரால் திருவடி நிலையே (9) அற்புத விளக்கம் அமைந்த பாடல்கள் நான்கையும் பழுதர ஒதிப் பரமனின் திருவடி நிலையை அறிந்து மகிழ்வோம். 44. காட்சிக் களிப்பு: அருட்பெருஞ் சோதி எம் பெருமானின் திருக்காட்சியை நேரில கண்டு இன்புற்ற அடிகள் அக்களிப்பினைப் பத்துப் பாடல்களில் கூறி மகிழ்கின்றார். பாடல்கள் யாவும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் அமைந்தவை; அனைத்தும் 'எம் மானைக் கண்டுகளித் திருக்கின்றேனே" என்று இறுகின் றன. - அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை அருட்பெருஞ்சோதியினனை அடியேன் அன்பில் செறிந்தானை எல்லாம்செய் வல்ல சித்தாய்ச் சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப் பிறிந்தானை என்னுளத்தல் கலந்து கொண்ட பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (1) உள்ளானைக் கதவுதிறந்துள்ளே காண உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக் கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக் கொல்லாமை விரதம்எனக் கொண்டார் தம்மைத் தள்ளனைக் கொலைபுலையைத் தள்ள தாரைத் தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி எள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்ட எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. (3)