பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

添 276 嫁 இராமலிங்க அடிகள் அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங் காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத் தடுத்தானைப் பெரு நெறிக்குத் தடைதீர்த் தானைத் தன்னருளும் தன்பொருளும் தானே என்பால் கொடுத்தானைக் குற்றம்எலாம் குணமாக் கொள்ளும் குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. (1) சோற்றானைச் சோற்றில்உறும் சுகத்தி னானைத் துளக்கம்இலாப் பாரானை நீரா னானை காற்றானை வெளியானைக் கனலா னானைக் கருணைநெடுங் கடலானைக் களங்கா கானத் தோற்றானை நான்கானத் தோற்றி னானைச் சொல்லறியேன் சொல்லியபுன் சொல்லை யெல்லாம் ஏற்றாணை என்னுள்ளத்தில் எய்தி னானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (14) (சோறு முத்தி) முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே முளைத்தானை மூவாத முதலா னானைக் களையானைக் களங்கம்எலாம் களைவித் தென்னைக் காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம் விளையானைச் சிவபோகம் விளைவித் தானை வேண்டாமை வேண்டல் இவை மேவி என்றும் இளையானை மூத்தானை மூப்பி லானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. (6) தாயானைத் தந்தைஎனக் காயி ன்ானைச் சற்குருவு மானானைத் தமியேன் உள்ளே, மேயானைக் கண்கான விளங்கி னானை மெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன வாயானை வஞ்சம்இலா மனத்தி னானை வரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி