பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் ※ 279 筠 சமயமும் மதமும் கடந்ததோர் ஞான சபைநடம் புரிகின்ற தனியைத் தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச் சத்துவ நித்தசற் குருவை அமையளின் மனத்தைத் திருத்திநல் அருளார் அமுதளித் தமர்ந்தஅற் புதத்தை நிமலநிற் குணத்தைச் சிற்குனா கார நீதியைக் கண்டுகொண் டேனே (19) அடிநடு முடியோர் அணுத்துணை யேனும் அறிந்திடப் படாதமெய் அறிவைப் படிமுதல் அண்டப் பரப்பெலாம் கடந்த பதிவிலே விளங்குமெய்ப் பதியைக் கடியஎன் மனனங் கல்லையும் கனியிற் கடைக்கணித் தருளிய கருனைக் கொடிவளர் இடத்துப் பெருந்தயாநிதியைக் கோயிலில் கண்டுகொண் டேனே (22) கருத்தனை எனது கண்அனை யவனைக் கருணையார் அமுதெனக் களித்த ஒருத்தனை என்னை உடையநா யகனை உண்மையே தாகம முடியின் அருத்தனை வரனை அபயனைத் திருச்சிற் றம்பலத் தருள்நடம் புரியும் நிருத்தனை எனது நேயனை ஞான நிலையனைக் கண்டுகொண் டேனே (26) உத்தர ஞான சித்திமா புரத்தின் ஓங்கிய ஒருபெரும் பதியை உத்தர ஞான சிதம்பர ஒளியை உண்மையை ஒருதனி உணர்வை உத்தர ஞான நடம்புரி கின்ற ஒருவனை உலகெலாம் வழுத்தும் உத்தர ஞான சுத்தசன் மார்க்கம் ஒதியைக் கண்டுகொண் டேனே (28)