பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篆 280 豪 இராமலிங்க அடிகள் புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப் புணர்த்திய புனிதனை எல்லா நிலைகளும் காட்டி அருட்பெரும் நிலையில் நிறுத்திய நிமலனை எனக்கு மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா வாழ்க்கையில் வாழவைத் தவனைத் தலைவனை ஈன்ற தாயை.என் உரிமைத் தந்தையைக் கண்டுகொண் டேனே (29) இந்தப் பத்துப் பாடல்களையும் பத்தியுடன் ஒதி உளங்கொண்டால் திருச்சிற்றம்பலவன் நம் மனத்திரை யில் காட்சி தந்து கொண்டே இருப்பான். 47. உளம் புகுந்த திறம் வியத்தல்: இதில் எம் பெருமானின் அந்தர் யாமித்துவம் இயம்பப் பெறுகின் றது. பத்துப் பாடல்களைக் கொண்ட இப்பதிகம் எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் அமைந்தது. வானிருக்கும் பிரமர்களும் நாரனரும் பிறரும் மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே திருவடிசேர்த் தருள்களினச் செப்பிவருந் திடவும் நானிருக்கும் குடிசையிலே விருந்திநுழைந் தெனக்கே நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என் ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து துன்ழந் தடியேன் உள்ளமெனும் சிறுகுடிசை உள்ளும்துழைந் தனையே (1) உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும் ஒருசிறிதும் தடையிலதாய்த் ஒளியதுவே மயமாய் வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும் வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின் - வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபேர் இன்பம் கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே . கொடும்புலையேன் குடிசையிலும் குலவிதுழைந்தனையே (3)