பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岑 284 * இராமலிங்க அடிகள் மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த முகநகைக் கணவனே என்கோ போகமுள் விரும்பும் போதிலே வலிந்து புணர்ந்தஓர் பூவையே என்கோ ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த அம்பலத் தாடிநின் றனையே (7) இரவிலா தியம்பும் பகலிலா திருந்த இயற்கையும் இயற்கையே என்கோ வரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில் வயங்கிய வான்பொருள் என்கோ திரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே செய்ததோர் சித்தனே என்கோ கரவிலா தெனக்குப் பேரருட் சோதி களித்தளித் தருளிய நினையே (10) இவற்றைப் பாடி மகிழ்ந்து வள்ளல் பெருமான் பெற்ற அநுபவத்தை நாமும் பெற முயல்வோம். 53. உத்தர ஞான சிதம்பர மாலை: வள்ளல் பெரு மான் வாழ்வில் அதிகமாகக் கவர்ந்தது தில்லை என வழங்கும் சிதம்பரம்; அவர் உள்ளங் கவர்ந்தவன் சிற்றம்பலவன். அடிகள் சிதம்பரத்தை பூர்வஞான சிதம் பரம் என்றே குறுப்பிடுவர். வடலூர் பகுதியில் அமைந்த சிற்றம்பலத்தை உத்தர ஞான சிதம்பரம் என்று குறிப்பிடுவர். இத்திருத்தலம் பற்றிப் பதினொரு பாடல்கள்; இவை கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்தவை. இவற்றில் ஐந்து பாடல்கள்: அருளோங்கு நின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன் மருளேங் குறாமல் தவிர்ந்தது நல்ல வரமளித்தே பொருளேங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும்