பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 梁 289 影 இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந் திடல்வேண்டும்; எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்: பொருளாம்.ஓர் திருவடிவில் உடையாயும் நானும் புனர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே (10) இப்பகுதி மிகவும் முக்கியமானது. வள்ளலாரின் தத்துவமே இதில் அடங்கியுள்ளது; அவர் நன்னோக்கம் தெளிவாகக் காட்டப் பெற்றுள்ளது. 57. அருள்விளக்க மாலை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த 100 பாடல்களைக் கொண்ட இப்பகுதி, மிகமிக முக்கியமானது. தனி நூலாக விளக்கவுரையுடன் வெளிப்பட்டுப் பெறவேண் டிய தகுதியையுடையது. வள்ளலாரின் உயிர்நாடியான தத்துவ விளக்கம் கொண்டது. அனைத்துப் பாடல் கள்ையும் ஆழ்ந்து கற்க வேண்டியவையாக இருப்பி னும் சில பல பாடல்களை மட்டிலும் ஈண்டுக் காட்டு வேன். அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே அருள்அமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே மன்றில்நடம் புரிகின்ற மனவாள எனக்கே தெருள்அளித்த திருவாள ஞானஉரு வாள தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே (1) கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைதண் ணிரே உகந்ததண்ணி இடைமலர்ந்த சுகந்தமண மலரே மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங்காற்றே மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே இராம.-20