பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

※ 294 梁 இராமலிங்க அடிகள் கால்வருனம் கலையாதே வீணில்அலை யாதே காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே. மால்வருணம் கடந்தவரை மேல்வருணத் தேற்ற வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே (35) எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே என்ஆனை என்மகனே இரண்டில்லை ஆங்கே செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி அங்குமிங்கும் அப்புறமும் எங்கும்.நிறை பொருளே ஒவ்விடச்சிற் சபை,இடத்தும் பொற்சபையின் இடத்தும் ஓங்குநடத் தரசேனன் உரையும்அணிந் தருளே (86) இருந்தஇடம் தெரியாதே இருந்தசிறி யேனை எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே அதிசயிக்கத் திரு.அமுதும் அளித்தபெரும் பதியே திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடியில் உணர்ந்தோர் திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும் பெருநடந்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே (98) தலைகால்இங் கறியாதே திரிந்தசிறி யேனை - தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதும் தவிர்த்தே மலைவறுமெய் அறிவளித்தே அருளமுதம் அருத்தி வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து நிலையுறவே தானும்அடி யேனும்ஒரு வடிவாய் நிறையநிறை வித்துயர்ந்த நிலைஅதன்மேல் அமர்த்தி அலர்தலைப்பேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி ஆடுகின்ற அரசேனன் அலங்கல்அணிந் தருளே (100) இவண் குறிப்பிட்ட 20 பாடல்களையும் உளங் கரைந்து படித்து அநுபவித்தால் இறைவனது அருள் விளக்கம் நம் மனத்திரையில் தெளிவாகப் பதிவு பெறும்.