பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

冢 298 笨 இராமலிங்க அடிகள் ஒருத்தனைஎன் உயிர்த்துணையை உயிர்க்குயிரை உயிர்க்குனர்வை உணர்த்த னாதி அருந்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ (1) பிறிவெனைத்தும் தோற்றாதென் உளங்கலந்த பெருந்தகை.எம் பெருமான் தன்னைச் செறிவனைத்தும் என்மனத்துக் களித்தெனக்குப் பெருங்களிப்புச் செய்தான் தன்னை முறிவெனைத்தும் இன்றி.அருள் அமுதுணவு கொடுத்தெனக்கு முன்னின் றானை அறிவனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ (4) எம்மையும்என் தலைப்பிரியா தென்னுளமே இடங்கொண்ட இறைவன் தன்னை இம்மையில்என் தனக்கழியாத் திருவடிவம் தந்தானை எல்லாம் வல்ல செம்மைதரு சித்தனைஎன் சிவபதியைத் தெள்ளமுதத் திரளை என்றன் அம்மையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ (7) சாதியைநீள் சமயத்தை மதத்தையெல்லாம் விடுவெத்தென் தன்னை ஞான நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தி னானைப் பாதியைஒன்றானவனைப் பரம்பரனைப் பராபரனைப் பதிஅ னாதி ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ தியைப்பெற்றேன் அச்சே அச்சோ (10) பாடல்கள் யாவும் அருட்பெருஞ்சோதியைப் பெற் றேன் அச்சோ அச்சோ என்று இறுகின்றன. திருச்சிற் றம்பலப் பெருமானைத் தான் பெற்ற பேற்றை