பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 篆 299 案 நினைந்து களிக்கின்றார் அடிகள் அச்சோ அச்சோ' என்று சொல்லிச் சொல்லி, 89. அருட்பெருஞ்சோதி அடைவு: அருட்பெருஞ் சோதி தம் உள்ளத்தில் கலந்ததை எண்ணி எண்ணிக் களிக்கின்றார்; மனநிறைவு பெறுகின்றார் அடிகள் என் பதை இப்பதிகம் விளக்குகின்றது. இதில் கட்டளைக் கலித்துறை யாப்பில் ஆன 13 பாடல்கள் அடக்கம். அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற அருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்தறி வாய்விளங்கும் அருட்பெருஞ் சோதித்தெள் ளார்.அமு தாகிஉள் அண்ணிக்கின்ற அருட்பெருஞ் சோதிநின் ஆசைஒன் றேஎன்னுள் ஆர்கின்றதே (1) கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி கொண்டென் சிவானந்தக் கூத்தாடிக் கொண்டிக் குவலயத்தே தொண்டே திரு.அம் பலந்தனக் காக்கிச் சுகஅமுதம் உண்டேன் உயிர்தழைத் தோங்குகின் றேன்.உள் உவப்புறவே (5) நிலத்தே புழுத்த புழுவும் அலேன்புன் நிலத்திழிந்த மலத்தே புழுத்த புழுஅனை யேனை.அவ் வான்துதிக்கும் குலத்தே தலைமை கொடுத்தென் உளத்தில் குலவுகின்றாய் தலத்தே அருட்பெருஞ் சோதிஅப் பாஎன் தயாநிதியே (10)