பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 举 303 岑 கரும்பின்மிக இனிக்கின்ற கருணைஅமு தளித்தீர் கண்ணனையீர் கனகசபை கருதியசிற் சபைமுன் துரும்பின்மிகச் சிறியேன்நான் அன்றுநின்று துயர்ந்தேன் துயரேல்என் றெல்லையிட்டீர் துரையேஅவ் வெல்லை விரும்புறஆ யிற்றிதுநான் தருணம்.இந்தத் தருணம் விரைந்தருள வேண்டுமென விளம்பிநின்றேன் அடியேன் பெரும்பிழைகள் அனைத்தினையும் பொறுத்தருளி இந்நாள் பெரிதளித்திர் அருட்பெருமை பெற்றவனில் பெரிதே (9) அந்நாளில் அடிச்சிறியேன் அம்பலவா யிலிலே அருளைநினைந் தொருபுறத்தே அயர்ந்தழுது நின்றேன் முந்நாளில் யாம்புரிந்த பெருந்தவத்தால் எனக்கு முகமலர்ந்து மொழிந்தஅருண் மொழியைநினைந் தந்தச் செந்நாளை எதிர்பார்த்தே பன்னாளும் களித்தேன் சிந்தைமலர்ந் திருந்தேன்.அச் செல்வமிகு திருநாள் இந்நாளே ஆதலினால் எனக்கருள்வீர் என்றேன் என்பதன்முன் அளித்திர்தும் அன்புலகில் பெரிதே (10) இந்த ஐந்து திருப்பாடல்களையும் ஐயமற அன்பு டன் ஓதி உளங்கரைந்தால் வள்ளல் பெருமானின் அது பவம் நமக்கும் கிட்டும் என உறுதியுடன் நம்பலாம். 97. திருவருட்பேறு எம்பெருமானின் திருவருள் பேறு பெற்றதை நெஞ்சு நெகிழ்ந்து பேசுகின்றார் அடிகள். பத்து நேரிசை வெண்பாக்களாலான பதிகம் இது. சீர்விளங்கு சுத்தத் திருமேனி தான்தரித்துப் பார்விளங்க நான்படுத்த பாயலிலே - தார்விளங்க வந்தாய் எனைத்துக்கி மற்றொருசார் வைத்தனையே எந்தாய்நின் உள்ளமறி யேன் (4) உன்னுகின்ற தோறுமென துள்ளம் உருகுகின்ற தென்றுரைப்பேன் என்னுரைப்பேன் எந்தாயே - துள்ளிநின்று தூக்கம் தவிர்த்தென்னைத் தூக்கிஎடுத் தன்பொடுமேல் ஆக்கமுற வைத்தாய் அது (5)