பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓 3G4 笨 இராமலிங்க அடிகள் அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் அங்கொருசார் பஞ்சின் உழந்தே படுத்தயர்ந்தேன் - விஞ்சிஅங்கு வந்தாய் எனைத்துக்கி மற்றொருசார் வைத்தமுது தந்தாய்என் நான்செய் தவம் (8) நானே தவம்புரிந்தேன் நானே களிப்படைந்தேன் தேனே எனும்.அமுதம் தேக்கஉண்டேன் - ஊனே ஒளிவிளங்கப் பெற்றேன் உடையான் எனைத்தான் அளிவிளங்கத் தூக்கிஅனைத் தான் (9) இந்த நான்கு பாடல்கள் போதும் எம்பெருமான் திருவருட் பேற்றை அறிந்து கொள்ள, 102. தத்துவ வெற்றி: இப்பகுதி இருபது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலானது. மனத்தை அடக்கியாண்ட பெருமையைப் பேசுவன. நான்கு பாடல்களில் ஆழங்கால் படுவோம். மனம்எனும்ஒர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான் மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய் இனமுறளன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய் இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றினல்ஆ னாலோ தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம் சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கனத்தே நனவில்.எனை அறியாயோ யார்என இங் கிருந்தாய் ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே (2) விரிந்தமனம் எனும்,சிறிய விளையாட்டுப் பயலே விரிந்துவிரிந் தலையாதே மெலியாதே விடயம் புரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறிவாய்ப் புரையாதே விரையாதே புகுந்துமயங் காதே தெரிந்து தெளிந் தொருநிலையில் சித்திரம்போல் இருநீ சிறிதசைந்தால் அக்கணமே சிதைந்திடுவேன் கண்டாய் பரிந்தெனை நீ யார்என்று பார்த்தாய்சிற் சபைவாழ் பதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே (4)