பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 裘 305 ※ அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய் செகங்காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து திரிகின்றாய் நின்செபந்தான் சிறிதும்நட வாது இகங்கான அடங்குகநீ அடங்காயேல் கணத்தே இருந்தஇடம் தெரியாதே எரிந்திடசெய் திடுவேன் சுகங்கான என்றைைநீ அறியாயோ நான்தான் சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை காணே (8) எத்துணையும் காட்டாத ஆணவம்என் றிடும்ஒர் இருட்டறைக்கோர் அதிகாரக் குருட்டுமுடப் பயலே இத்தனைநாள் பிடித்ததுனைக் கண்டுதுரத் திடவே இன்னும்அரைக் கனந்தரியேன் இக்கணத்தே நினது பொத்தியசுற் றத்துடனே போய்விடுதி இலையேல் பூரணமெய் அருள்ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே சத்தியஞ்சொன் னேன்.எனைநீ அறியாயோ ஞான சபைத்தலைவன்திருதலைமைத்தனிப்பிள்ளை நானே (13) பயம்எனும்ஒர் கொடும்பாவிப் பயலேநீ இதுகேள் பற்றறஎன் தனைவிடுத்துப் பனிக்கடல்வீழ்ந் தொளிப்பாய் தயவின்உரைத் தேன்.இன்னும் இருத்தினனில் உனது தன்றலைக்குத் தீம்புவரும் தலைமட்டோ நினது செயலுறும் உள் உடம்பழியும் சுற்றமெலாம் இறக்கும் தீர்ந்ததினி இல்லையென்றே திருவார்த்தை பிறக்கும் அயலிடைநேர்ந் தோடுகநீ என்னைஅறி. வாயோ அம்பலத்தென் அப்பன்அருள் நம்புபிள்ளை நானே (17) இறைவன் அருள்பெற்ற தம்மை மனம் முதலிய உணர்வுகள் ஒன்றும் செய்ய முடியாது என இறைத் தத்துவ வெற்றியை உறுதிப்படுத்துகின்றார். 104. அடைக்கலம் புகுதல்: அடைக்கலம் புகுதல் என்பது சரணாகதித் தத்துவம். அடைக்கலத்தைப் பற்றி எல்லாச் சமயப் பெரியார்கள் பேசி வந்தாலும் அதனை முதன் முதலாக ஒரு தத்துவம்போல் நிறுவிய பெருமை ទ្ធិព្វាលឯ. – 21