பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓 306 缘 இராமலிங்க அடிகள் நம்மாழ்வாரைச் சாரும். பக்தி நெறியை இன்னார்தாம் மேற்கொள்ளலாம் என்ற வரையறை இருந்தமையால் பெண்கள் உட்பட எல்லா நிலை மக்களும் கடைப்பிடிப் பதற்கேற்ற நெறி பிரபத்தி நெறி'யைக் கண்டவர் சட கோபன். இதுபற்றிய முழுவிவரம் அறிய வேண்டு வோர் பூரீவசன பூஷணம், முமுட்சுப் படி போன்ற வைணவ நூல்களைப் படித்துத் தெளியலாம். இத்த கைய நெறியை நம் அடிகளும் பதினொரு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பினால் சுட்டியுரைக் கின்றார். இவற்றுள் நான்கு பாடல்களில் ஆழங்கால் படுவோம். எண்ண நின்றேன் எண்ணம்எலாம் எய்த அருள்செய் கின்றதனித் தண்ணார் அமுதே சிற்சபையில் தனித்த தலைமைப் பெருவாழ்வே கண்ணார் ஒளியே ஒளிஎல்லாம் கலந்த வெளியே கருதுறும்என் அண்ணா ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே (1) தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர் ஊனே புகுந்த ஒளியேமெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம் வானே என்னைத் தானாக்கு வானே கோனே எல்லாம்வல் லானே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே (3) நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப்