பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

錄 310 密 இராமலிங்க அடிகள் பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப் பரவுகின்றார்அன்பு விரவுகின் றாராய் நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும் நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே எல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் சோதி என்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே (4) புன்மாலை இரவெலாம் புணர்ந்தது ஞானப் பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர் சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார் கத்தசன் மார்க்கசங் கத்திவர் எல்லாம் மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார் வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார் என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி என்பதி யே.பள்ளி எழுந்தருள் வாயே (5) மதம்பிடித் தவர்எல்லாம் வாய்பிடிப் புண்டு வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான் கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார் பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார் இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே (8) பாடல்களை பாவனையோடு பரவி நின்றால் நாமே அருட்பெருஞ்சோதியை எழுப்புவது போன்ற மானச காட்சி நம் மனத்தில் ஏற்பட்டு மகிழலாம். 132. உலகர்க்கு உய்வகை கூறல்: இப்பகுதியில் பத்துப் பாடல்கள் உள்ளன. தம் எதிர்காலத்தை எண் ணாமலும் பிறவிப் பயனைக் கருதாமலும் மனம்போல் திரிகின்ற உலகரை நோக்குகின்றார். அவர்தம் நிலைக் குப் பரிதாபப்படுகின்றார். சில அறவுரைகளைக் கூறி உய்வகைக்கு ஆற்றுப்படுத்துகின்றார் பத்து எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களில்.