பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 涂 15 蚤 செந்தா மரைத்தாள் இணைஅன்றே சிக்கென் றிருகப் பிடித்தேனேல் இந்தார் சடையாய் திருஆரூர் இறைவா துயரற் றிருப்பேனே. - 3. திருவாரூர்ப் பதிகம் - 9 என்பது. இப்பாடலுள் 'எந்தாய் ஒருநாள் அருள் வடி வின் எளியேன் கண்டு களிப்படைய வந்தாய்’ என்பது அடிகளாரின் அநுபவமாகும். (ஊ) திருக்கண்ணமங்கை: இஃது ஒரு வைணவ திவ்விய தேசம். திருவாரூருக்கு அருகிலுள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள அபிடேக வல்லித் துதியாக அடிகள் அருளிய ஒரே ஒரு பாடல் உள்ளது. அடிகள் திருவா ரூரை வழிபட்ட காலத்தில் இத்திருத்தலத்தையும் சேவித் திருத்தல் கூடும். சென்னை வாழ்வை நீத்தது: சென்னை வாழ்வு தமது ஞான வாழ்வுக்கு உகந்ததன்று என்பதை உணர்ந்த அடிகள் குடும்பத்தினரையும் நகரத்தையும் விட்டு நீங் கித் தொலைவிற் சென்று வதியக் கருதினர். தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிறுகுறும் என்றுளம் பயந்தே நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே நண்ணினேன். ஊர்ப்புறம் அடுத்த காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்துற்ற இளைப்பை ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்ததைநீ அறிந்தது தானே. - 6. பிள்ளை. பெரு.விண். 58 என்ற பாடல் அகச்சான்றாக அமைகின்றது. சென்னை