பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

豪 18 濠 இராமலிங்க அடிகள் வாழ்வை நீத்த காரணத்தை நுவல்கிறது இப்பாடல்." பல தலங்களை வழிப்பட்டுக் கொண்டு சிதம்பரத்தை வந்தடைகின்றார். 3. பூர்வஞான சிதம்பரப் பகுதி (1858 - 1869) இப்போது அடிகளின் அகவை (35-44). இப்பகுதி பெரும்பாலும் வடலூர் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குமுன் நடைபெற்ற வாழ்க்கையைக் குறிப்ப தாகும். - o கருங்குழியில்: சென்னையைவிட்டு வெளியேறிய தும் பல தலங்களை வழிபட்டுக் கொண்டு சிதம்பரம் வருங்கால், கருங்குழி மணியக்காரர் வேங்கட ரெட்டியா ரைக் காண நேரிடுகின்றது. அவர் வேண்டுகோட் கிணங்க அடிகள் கருங்குழி சென்று ரெட்டியார் இல்லத் தில் தங்குகின்றார்கள். அடிகளாருக்குத் தனி அறை ஒதுக்கப் பெறுகின்றது. அடிகளாருக்கு உண்டியும் ரெட்டியார் இல்லத்திலேயே. கண்ணன் விதுரன் வீட் டிற்கு எழுந்தருளியபோது, 'என்ன மாதவம் செய் ததோ இச்சிறுகுடில்?’ என்று சொன்னதாகப் பாரதக் குறிப்பு. அங்ங்னமே அடிகள் ரெட்டியார் இல்லத்தில் தங்குவதற்கு அவர் இல்லம் என்ன மாதவம் செய்ததோ என்று நினைக்கத் தோன்றுகிறது. (1) கருங்குழி விநாயகர் கருங்குழியில் அடிகள் தங்கியிருந்த அகத்திற்கு அருகில் உள்ள ஆனைமுக னைப் பாடியுள்ளார். மூன்றாம் திருமுறையில் இறுதி பகுதியில் மூத்த பிள்ளையார் திருப்பதிகங்கள் நான்கில் மூன்றாவதாகிய கணேசத் திருவருள் மாலையில் இறு திப் பாடலில் இப்பிள்ளையாரைப் பற்றிக் குறிப்பு 4. இப்பாடல் பின்னாளில் அடிகள் வடலூரில் எழுந்தருளியிருந்த காலத்தில் பாடியதாகும்.