பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 缘。1了 筠 நாவி னாலுனை நாள்தொறும் பாடுவார் நாடு வார்தமை நண்ணிப் புகழவும் ஒவி லாதுனைப் பாடவும் துன்பெலாம் ஒடவும் மகிழ் ஓங்கவும் செய்குவாய் காவி நேர்களத் தான்மகிழ் ஐங்கரக் கடவு எேநற்க ருங்குழி என்னும் ஊர் மேவி அன்பர்க்க ருள்கண நாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே. - 3. கணேசத் திருஅருள் மாலை - 10 என்ற பாடலில் இதனைக் காணலாம். இந்த நான்கு விநாயகர் பதிகங்களுமே கருங்குழி விநாயகரைப் பற் றிப் பாடப் பெற்றனவாகலாம் என்ற கருத்தும் உண்டு. (2) திருமுதுகுன்றம்: நடுநாட்டுத் தலம் 22இல் ஒன்று இது. தற்சமயம் விருத்தாசலம்’ என்ற பெயரில் வழங்கி வருகிறது. சில அடிகளே உயரமுள்ள ஒரு கற்பாறையின் மேல் கோயில் அமைந்துள்ள இறைவன் - பழ மலைநாதர்; இறைவி: பெரிய நாயகி. இத்தலத்தின் மீது பழமலையார் திருப்பதிகம் ஒன்றும் சில. தனிப் பாடல்களும் அடிகள் அருளியவை. இவை மூன்றாம் திருமுறையில் அடக்கம். (3) திருவண்ணாமலை. இதுவும் நடுநாட்டுத் தலங்க ளுள் ஒன்றாகும். இறைவன் - அண்ணாமலையார்: இறைவி - உண்ணாமுலை அம்மை. அண்ணாமலை ஐம்பூதத் தலங்களுள் தேயு(தீ)த் தலம். நான்முகன், மால் காணாப் பெரியோனாக - திருக்கொழுந்தாக - 5. தேவார முதலிகள் மூவரும் இதனைப் பாடியுள்ளனர். சம்பந்தர் பதிகம் ஏழும், அப்பர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் மூன்றும் இத்தலத்திற்கு உள்ளன. சுந்தரர் பதிகம் பாடி பழமலையாரிடம் 12,000 (பன்னிராயிரம்) பொன் பெற்று இங்கு மணிமுத்தாற்றில் இட்டு திருவாரூரில் குளத்தில் எடுத்தார். (ஆறும் குளமும் வங்கிகள்போல் செயற்பட்டது அற்புதம்). இத்தலம் காசியிலும் வீசம் பெரியது என்பர். ஆதலின் விருத்தகாசி எனவும் வழங்கப்படும். இராம.-3