பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 崇 335 崇 என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்அவர்தாம் இருக்க இடம்புனைக என்கின்றாள் இச்சைமய மாகித் தன்னுயிர்தன் உடல்மறந்தாள் இருந்தறியாள் படுத்தும் தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள் அன்னமுனை அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில் அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள்பல பெற்றாள் மின்னில்வளை விழைவதுண்டேல் வாய்மலர வேண்டும் மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே (9) தோழி தன் தலைவியின் (அடிகளின்) பக்திக் காதலை இறைவனுக்கு எடுத்துக் கூறுவதாக பாடல்கள் நடைபெறுகின்றன. இங்குத் தோழி கூற்றாக தலைவி யின் (அடிகளின்) பக்திக் காதலை அறிய முடிகின்றது. 141. தலைவி கூறல்: இதில் தலைவி கூற்றாக தன் (அடிகளின்) காதலை எடுத்துரைப்பதாகப் பாடல்கள் அமைந்துள்ளன. இதில் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் பத்துப் பாடல்கள் உள்ளன. பாடல் களின் இறுதியடிகள் 'சத்தியம்சத் தியம்மாதே சத்தியம் சத் தியமே என்று அமைகின்றன. தந்தேகம் எனக்களித்தார் தன்.அருளும் பொருளும் தம்மையும்.இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்