பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. நிறைவுரை !ெ ஸ்ளல் பெருமான் இளமைக்கால வாழ்க்கையை உற்று நோக்கினால் அவர் விட்ட குறையைத் தொட்டு நிறைவேற்றற்கென்றே பிறந்தவர் என்பதும், இறை வன் வருவிக்க இப்புவியில் தோன்றினவர் என்பதும் தெளிவாகின்றன. தமையனார் சபாபதிப் பிள்ளையவர் களிடமும் காஞ்சி சபாபதி முதலியாரிடமும் கற்றது குறைவு; முருக உபாசணைமூலம் கற்றது அதிகம். அவன் தமிழ்க் கடவுள் அல்லவா? ஒதாது உணர்ந்த பெருமான் முருகப் பெருமானிடம் 'கற்றதும் கேட்ட தும் அவனருளாலேயே என்பது பெறப்படுகின்றது. ஒரு வயது நிரம்புவதற்கு முன்னே சிதம்பர இரகசியம்’ கண்டவரல்லவா? இளவயதிலேயே பாடல் இயற்றும் பாங்கும் கைவ ரப் பெற்றவராதலாலும் பன்னிரண்டு அகவையிலேயே ஞானவாழ்க்கையைத் தொடங்கியவராதலாலும் பாடல் கள் சம்பந்தப் பெருமான் வாக்கில் வந்ததுபோல் இவர் வாக்கிலும் இயல்பாகவே வந்தன. திருக்குறள் பயிற்சியும் தேவார திருவாசக ஈடு பாடும் வள்ளல் பெருமானைச் சிறந்த பக்திமானாக மாற்றிவிட்டதை இவர்தம் பாடல்களால் அறிய முடிகின் றது. யாப்பு வகைகள் அனைத்தும் கும்மி கொட்டிக் குதுலிப்பதைக் கண்டு மகிழலாம். பல்வேறு வகை இசைப் பாடல்கள் இவர் நாக்கில் தாண்டவமாடி வாக் கில் வெளிவருவதைக் காணும் நம்மை வியப்புக் கடலில் ஆழ்த்துகின்றது. தில்லைச் சிற்றம்பலவன் திருவருள்