பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 342 密 இராமலிங்க அடிகள் இவருக்கு நிறைய இருந்தமையால் ஆடலரசனைப் பற் றிய பாடல்கள் இவர்தம் அருளிச் செயல்களில் அதிகமா கவே தலைக் காட்டுகின்றன. திருமந்திரப் பயிற்சி இவர் தம் உள்ளொளியைப் பெருக்கி இருக்க வேண்டும். இறையருள்தான் இவரைச் சமரசசுத்த சன்மார்க்கத் தைக் காணவைத்தது. அன்றே என்னை அடிய னாக்கி யாண்ட சோதியே அதன்பின் பிள்ளையாக்கி யருளில் களித்த சோதியே நன்றே மீட்டு நேய னாக்கி நயந்த சோதியே - நானும் நீயும் ஒன்றென்றுரைத்து நல்கு சோதியே - கீர்த்தனைப் பகுதி: மெய்யருள் வியப்பு, 96 என்ற அடிகளின் திருவாக்காலேயே இதனை அறிய லாம். நானும் நீயும் ஒன்று’ என்பது சன்மார்க்கம். 'சோதியே’ என்பது இவர்கண்ட அருட்பெருஞ்சோதி” என்ற இறைவன். இறைவனை ஒளியாக - அருட் பெருஞ் சோதியாக - கண்ட அடிகள் அந்தச் சோதியி லேயே இரண்டறக் கலந்தார் என்பது வரலாறு. அவ்ர் தம் அருளிச் செயல்கள் யாவும் - ஒன்று சேர்ந்து ஒரே குரலாக - ஒரு பெரிய குரலாக - நம்மையும் அதில் வந்து கலக்குமாறு அழைக்கின்றன. - அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி என்று வள்ளலார் கழலை வாழ்த்தி நம் வாழ்வைப் புனிதவள வாழ்வாக்கிக் கொள்வோமாக,