பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

飄 20 襯 இராமலிங்க அடிகள் (தில்லை கோவிந்தர், தில்லை நடராசர்) இருப்பது இத்த லச் சிறப்பு. சிதம்பர ரகசியம் அருள்வழிபாட்டிற்குரிய தாகலின் எச்சமயத்தார்க்கும் பொது என்பதில் ஐயம் இல்லை. 'எச்சமய முடிவுகளும் திருச்சிற்றம்பலத்தே இருந்த என வள்ளல் பெருமானும் அருளுவர். இதனை இறைவனே தமக்கு அறிவித்தருளினான் என்பர். இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித் தச்சுறவே பிறமுயற்ற செயுந்தோறும் அவற்றைத் - தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே எச்சமய முடிவுகளும் திருச்சிற்றம் பலத்தே இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே. முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும் முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே. - 6. அருள்விளக்க மாலை - 53 என்ற பாடலைக் காண்க. (அ) எல்லாம் செயல் கூடும் என் ஆனை: அம்ப லத்தே எல்லாம் வல்லான் தன்னை ஏத்தின் எல்லாம் செயல்கூடும் என்று தன்மேல் ஆணையிட்டு அருளியுள் ளார். எல்லாம் செயல்கூடும் என்ஆனை அம்பலத்தே எல்லாம்வல் லான்தனையே ஏத்து. என்று அடிகள் ஆணையிட்டுக் கூறிய இக்குறள் வெண்பா அடிகளது திருவாயிற் பிறந்தது முதல் இன்று வரை சன்மார்க்கிகளால் மந்திர மொழியாகப் பெரிதும் பயிலப் பெற்று வருவது.