பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 莎。25 操 (i) திருக்கடைக்காப்பால் இறைவன் திரு வுளங் காட்டியருளியது" ஒருநாள் திருக்கடைக்காப்பாகிய சம்பந்தர் தேவ ராத்தால் இறைவன் அடிகட்குத் தன் திருவுளத்தைக் காட்டியருளினான். காட்டிய நாளில் அடிகள் அதனை அறிந்திலர். பின்னொரு நாள் அடிகளின் உளத்திலி ருந்தே இறைவன் பெருநெறியைக் காட்டியருளினான். அங்ங்னம் காட்டிய நாளில் முன்பு திருக்கடைக் காப் பால் காட்டியருளிய தன் பொருளை அடிகள் உணர்ந்த னர். திருக்கடைக்காப்பால் திருவுளங் காட்டியதை 'திரு நெறி மெய்த்திருமறையாம் (2 திருஅருள் விலாசம் - 2) என்ற பாடலில் குறிப்பிடுகின்றார் அடிகள். (i) திருமந்திருத் திருமுறையால் உணர்த்தியருளியது: இதனை அடிகள் திருவளர் திருஅம் (6 பிள்ளைப் பெருவிண்ணப்பம் - 118) என்ற பாடலால் குறிக்கின் றார். 6. சமரச சுத்தசன்மார்க்க சங்கம் நிறுவியது 1865இல். முதலில் சமரச வேத சன்மார்க்க சங்கம் என்ற பெயரில் நிறுவப் பெற்றது. பின்னர் மேற்காட்டிய பெயரால் மாற்றப் பெற்றது. く 。 - கொள்கைகள்: கடவுள் ஒருவரே. அவரை உண்மை அன்பால் ஒளி (சோதி) வடிவில் வழிபட வேண்டும். சிறு தெய்வ வழிபாடு கூடாது. அத்தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கூடாது. புலால் உண்ணக் கூடாது. சாதி சமய முதலிய எவ்வகை வேறுபாடுகளும் கூடாது. எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் 10. சம்பந்தர் தேவாரத்தைத் திருக்கடைக் காப்பு என்பதும், திருநாவுக்கரசர் தேவாரத்தைத் தேவாரம் என்றே வழங்குவதும், சுந்தரர் தேவாரத்தைத் 'திருப்பாட்டு என்பதும் ஒருவகை வழக்கு.