பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 器 27 梁 ஆதலின் அடிகளது அறையில் விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். அடிகள் இரவில் ஒரு மணி நேரமே உறங்குவார். தியானம் செய்வதிலும் அருட் பாக்களைப் பாடுவதிலும் எழுதுவதிலுமே மற்றைப் பொழுதைக் கழிப்பர். ஒருநாள் ரெட்டியார் வீட்டுத் தலைவி அயலூர் சென்றிருந்தபொழுது விளக்கருகே எண்ணெய்க் கலம் ஒன்றும், புதிய மண்கலத்தைப் பழக்குவதற்குத் தண்ணிர் நிரப்பிய கலம் ஒன்றும் வைத் துச் சென்றிருந்தனர். அடிகள் தண்ணிர்க் கலத்தை எண்ணெய்க் கலம் என்று கருதி தண்ணிரையே விளக் கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விளக்கும் எறிந்து கொண்டேயிருந்தது. மறுநாள் அம்மையார் திரும்பிய தும் உண்மை தெரியலாயிற்று. அடிகளோ என்னால் என்ன இருக்கிறது? இறைவன் சந்நிதியில் தண்ணிர் விளக்கும் எரிந்தது!’ என்று கூறி அமைந்தனர். இச் செய்தி பலர் எழுதிய பாடல்களில் தெரிவிக்கப்படுகின் றன. (2) இறைவன் இரவில் ஒன்றுக் கொடுத்தது: ஒருநாள் நள்ளிரவில் இறைவன் மானிடத் திருமேனி தாங்கி நள்ளிரவில் கதவைத் தட்ட, அடிகள் திறந்தார். வந்தவர் தன் திருவடிகளில் ஒன்றை வாயிற்படியின் அகத்தும் மற்றொன்றைப் புறத்தும் வைத்தவாறு நின்று இது தேவர்க்கும் அரிது; நற்றவர்க்கும் அரிது. உனக்கிது நாம் நல்கினம்’ என்று உணர்த்திச் சென்றார். இதனை 4 அருட்பிரகாச மாலை (ஐந்தாம் திருமுறை) பாடல்கள் 1,4, 6,7, 17,23ஆல் அறியலாம். (3) திருநீறு கேட்க சுடர்ப்பூ அளிக்கப் பெற்றது: மற்றொரு நாள் அடிகள் அன்பர்கள் புடைசூழ இருந்த போது இறைவன் எழுந்தருளி மற்றவர்க்கெல்லாம் திரு நீறு அளித்து அடிகளை நோக்கிப் புன்னகை புரிந்து திருநீற்றுப் பையிலிருந்து 'செஞ்சுடர்ப்பூ ஒன்றை