பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 第 29,寨 லின் திருவருட் பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க பிள்ளையவர்கள் என்று குறிப்பிடப் பெற் றது. நூல் வெளிவந்த பின்னர்' இதனைக் கண்ணுற்ற அடிகள் வருந்தினார். பின்னர் ஒருவாறு சமாதானப்பட் டுத் திருவருட் பிரகாச வள்ளல் ஆர் என்று கேட்கிற இராமலிங்கம்' என்று வைத்துக் கொள்ள வேண்டுமோ? என்று அருளினாராம். 4. உத்தர ஞானசிதம்பரப் பகுதி (1867 1870). ' அடிகளாரின் அகவை (44.47) அடிகளாரின் கொள்கைகளுள் தலையாயது சீவ காருண்யம். இதனை அடிகள் இருவகையாக வற்புறுத் துவர். (1) ஒன்று புலால் மறுத்தல், (2) அற்றார் அழி பசி தீர்த்தல். பின்னதை ஈண்டும் முன்னதைப் பிறிதோரி டத்தும் காட்டுவோம். பசிக் கொடுமை: பசி எல்லா உயிர்கட்கும் பொதுவா னது. அன்னை கருவறையிலிருந்து வெளிவந்த நாள் முதல் காலன் கொண்டு போகும் வரையில் நிலைத்திருப் பது. கொடியவற்றுள் எல்லாம் கொடியது. எல்லா வகைத் துன்பங்களுக்கும் மூலகாரணம் இதுவே. சீவர்கட்கும் பசி வந்த காலத்தில் சீவ அறிவு விளக்க மடையாமல் மயங்குகிறது. அது மயங்கவே அறிவுக் கறிவாகிய ஆண்டவன் விளக்கம் மறைபடுகின்றது. பல்வேறு அவத்தைகள் நேரிடுகின்றன. உணவு கிடைத் தபோது உண்டு பசி நீங்க அனைத்து அவத்தைகளும் நீங்குகின்றன. 12. நூலுக்கு திருவருட்யா எனப் பெயரிட்டவரும் அவற்றை ஆறு திருமுறைக ளாக வகுத்தவரும் தொழுவூர் வேலாயுத முதலியார். 13. பூர்வஞான சிதம்பரப் பகுதி என்பது தில்லையும் அதன் சுற்றுப்புறமுள்ள பகுதிகளுமாகும்.