பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

錄 30 紫 இராமலிங்க அடிகள் அடிகள் சீவகாருண்யத்தின் திருவுருவம். பசியால் துன்பமுறுவர்களைக் கண்டபோதும் அவர்களைப் பற் றிக் கேட்டபோதும் அடிகளாரின் உள்ளம் நடுங்கும். வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோறு இரந்தும் பசியறாது அய்ர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின் றோர்என நேர்உறக் கண்டுளத் துடித்தேன் ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன். (52) இது கண்டபோது வருந்தியதற்கு. எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே இலகிய இறைவனே உலகில் பட்டினி உற்றோர் பசித்தினி களையால் பரதவிக்கின்றனர் என்றே ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் உளம்பளி எனநடுக் குற்றேன் இட்டஇவ் வுலகில் பசிகளில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியில்பே. (22) - 6. பிள்ளைப் பெருவிண்ணப்பம் இது கேட்டபோது வருந்தியதற்கு. பசிக் கொடுமையை வள்ளல் பெருமான் உரைப் பது போலவும், பசி தவிர்த்தலின் சிறப்பை அவர் உணர்த்துவது போலவும் எவராலும் எப்பொழுதும் இயம்ப முடியாது. ஆற்றா மாக்களின் அரும்பசிகளை யும் பேரறமாகிய சீவகாருண்ய ஒழுக்கமில்லாதாரை பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் தேரீர், பழங்கஞ்சி யாயினும் வழங்கவும் நினையிர் (-6 உலகர்க்கு உய்