பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 線 31 嶽 வகை கூறல் - 6) என்று பகர்வர். தாம் கூறியதைச் செயலில் நடத்திக் காட்ட அமைக்கப் பெற்றதே சத்திய தரும சாலை. இடம் தேர்தல்: கருங்குழியை உறைவிடமாகக் கொண்டிருநதாலும், அடிகள் வடலூர்க்கு அடுத்தாற் போல் அதன் வடபுறமுள்ள பெருவெளியே தரும சாலையை அமைக்கத்தக்க இடம் எனத் தேர்ந்தெடுத்து எண்பது காணி நிலம் பலர் ஒத்துழைப்பால் வாங்கப் பெற்றது (2.2.1867). தொடக்க விழாவும் 25.3.1867இல் நடைபெற்றது. தருமசாலையின் தொண்டு. ஆற்றாமாக்களின் அரும் பசி களையும் பேரறம் தரும சாலையில் நாள்தோறும் நடந்து வந்தது. இன்றும் குன்றாது நடைபெற்று வரு கின்றது. சாதி சமய முதலிய வேறுபாடுகட்கு அங்கே சிறிதும் இடம் இல்லை. - புலாலுண்போர்; இவர்கள் சன்மார்க்கச் சங்கத்திற்கு அருகராகார். புலாலுண்பவரை அடிகள் சங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை. எனினும் அவர்கள் 'பசி’ என்று தரும சாலைக்கு வந்துவிட்டால் அப்புறவினத் தார்க்கும் உணவளிக்கத் திட்டம் இருந்தது. (5 அருள் விளக்கமாலை 71,72,73 பாடல்கள் காண்க) கிளைச் சாலைகள் தருமசாலையைச் சார்ந்து வைத்தி யசாலை, சாத்திர சாலை, உபகார சாலை, விருத்தி சாலை, உபாசனா சாலை, யோக சாலை, விவகார சாலை ஆகிய சாலைகளை அதன் கிளைகளாக நிறுவ அடிகள் திட்டமிட்டிருந்தார்கள். இவை நிறுவப் பெற்றனவாகத் தெரியவில்லை. 1. சீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூல் வெளியிடப் பெற்றது. இந்த நூலின் முதற் பதிப்பு அடிகள் சித்தி