பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

線。32 蠍 இராமலிங்க அடிகள் பெற்ற ஐந்தாண்டுகட்குப் பிறகு 1879-இல் புதுச்சேரி யில் பு.பெ.கிருஷ்ணசாமி நாயக்கரால் அச்சிடப் பெற் ற்து. . - . . 2. 'சன்மார்க்க போதினி பாடசாலை (1867). தரும சாலை நிறுவிய அதே ஆண்டிலேயே (1867) அடிகள் 'சன்மார்க்க போதினி” என்ற பாடசாலை ஒன்றினையும் நிறுவினார்கள். இப்பாடசாலை சிறுவர் முதல் முதியோர் வரை அனைவர்க்கும் கல்வி கற்பிப்பது, தமிழ், வட மொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் கற்பிக் கும் மும்மொழிப் பாடசாலை. தொழுவூர் வேலாயுத முதலியார் இப்பாடசாலைக்கு ஆசிரியராக நியமிக்கப் பெற்றார். - 3. சன்மார்க்க விவேக விருத்தி: இப்பெயரில் ஒரு பத்திரிகை தொடங்கப் பெற்றது. சன்மார்க்கக் கொள்கை களைப் பரப்புவதே இதன் நோக்கம். அடிகள் இதனை நடத்தி வந்ததாகத் தெரியவில்லை. 1969 முதல் (1.2.1969) தொடங்கி நடைபெற்று வருகிறது. 4. தருமசாலையில் உறைதல்: சாலை நிறுவப் பெற்ற பின்னர் அதுவே அடிகளின் உறைவிடமாயிற்று. அதன் பின்னர் அடிகள் கருங்குழியில் தங்கவில்லை. வெளியூர்கட்குச் சென்று தங்கிய சிற்சில காலந்தவிர மற்றைய காலங்களில் சாலையிலே (1867 முதல் 1870 வரை) உறைந்தனர். சன்மார்க்க சங்கத்தின் இறை வழிபாட்டிற்கும் பிற பணிகட்கும் சாலையே இடமாயிற்று; அதுவே சங்கத் தின் அலுவலகமாகவும் அமைந்தது. அப்பாசாமி செட் டியார் சாலையை நடத்தி வந்தார். இருபதின்மருக்கு மேல் உதவியாக இருந்து வந்தனர். அவர்கள் உதவும் பொருள்களால் சாலை நடைபெற்று வந்தது.