பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 繼 33 淑 அடிகளைப் பொறுத்தவரையில் தரும சாலை தவச் சாலையாகவும் திகழ்ந்தது. அடிகளின் முகத்தில் எப் போதும் துயரக் குறி இருந்து கொண்டே இருந்தது. இதற்குக் காரணங்கள் இரண்டு. (1) இறைவன் தனக்கு இன்றும் முற்றிலும் அருள் செய்யவில்லையே என்ற கவலை. (2) எவ்வளவோ சொல்லியும் தம் உபதேசங் களை மக்கள் செவிமடுத்துக் கடைப்பிடிக்கவில்லையே என்ற வருத்தம். இந்தக் கவலையோடும் வருத்தத்தோ டும் அடிகள் சாலையில் அருந்தவம் ஆற்றினார். 5. சாலையில் நிகழ்ந்த அற்புதங்கள் சிலவற்றை ஈண்டுக் காண்போம். (1) ஒரு நாள் அடிகள் உச்சிப் போதில் கடும் வெயி லில் வெளிச் சென்றார். அடிகள் திரும்ப வராதது கண்டு சண்முகம் பிள்ளை என்பார் வெளியே வந்து பார்க்க, அடிகளின் அங்கங்கள் வெவ்வேறாய்க் கிடப்பதைக் கண்டு நெருங்கி பதறி மயங்கி வீழ்ந்தார். உடனே அடிகள் அங்கங்களெலாம் ஒன்றாக்கிப் பிள்ளையவர் களின்முன் தோன்றி இனி இப்படி வாராதீர்’ என்று அன்புக் கட்டளையிட்டு அவருடன் இருப்பிடத்திற்குத் திரும்பினர். - (2) ஒருநாள் அடிகள் உடுத்த ஆடையை அவிழ்த்துத் தரையில் விரித்துப் படுத்தயர்ந்தபோது இறைவன் அடி கள் முன் தோன்றி அவரைத் தம் திருக்கரங்களால் தூக்கியணைத்து ஆறுதல் மொழி அருளி மறைந்தருளி னார். (6 திருக்கடைப் புகழ்ச்சி - 6: நடராச மாலை 24, 25); திருஅருட் பேறு - 2,3,6) ... . . . (3) ஒரே சமயத்தில் அடிகள் பல இடங்களில் திகழ்தல் சிலவற்றைக் காட்டுவோம். இராம.-4