பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

姊 36,蒂 இராமலிங்க அடிகள் போந்தார். அவர் வருமுன்னரே அடிகள் ஒருவர் புத்தி சொல்ல வருகிறார் என்றார். வந்தவருக்கு ஐந்தாறு மொழிகள் தெரியும். அப்போது அங்கே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனை அழைத்து, அவர் முன் நிறுத்தி எந்த மொழியில் எப் பொருளை வேண்டுமானாலும் இப்பிள்ளையைக் கேளுங்கள் என்று அடிகள் கூற அவர் பேச நாவெ ழாது அரை மணி நேரம் தவித்தார். செருக்கு அடங்கி மன்னிப்பு கோரி மனத்துள் துதிக்க பேச்சுவரப் பெற் றார். பின்னர் மன்னிப்புக் கேட்டுத் திரும்பினார். (11) கள்வர்க்கும் கருணை பாலித்தல்: மூன்று நிகழ்ச் சிகள் இதுபற்றியவை. () ஒருசமயம் மஞ்சகுப்பம் நீதிமன்ற அலுவலர் ஒருவரும் வள்ளல் பெருமானும் வண்டியில் மஞ்சகுப் பம் நோக்கி வந்து கொண்டிருந்தபொழுது வழியில் கள்வர் இருவர் வண்டியை மறித்து நிறுத்தினர். முதலில் இறங்கிய அலுவலரைக் கையிலிருந்த வைர மோதிரத் தைக் கழற்றும்படிக் கள்வர்கள் அதட்ட வள்ளல் பெரு மான் 'அவசரமோ என்றனர். கள்வர்கள் அடிப்பதற்கா கத் தடியை உயர்த்தினார்கள். உயர்த்திய கைகள் நின் றன; கண் பார்வையும் அற்றது. கள்வர்கள் இருவரும் தம் செயலுக்கு வருந்த, அடிகள் அருளால் கைகளும் கண்களும் செயற்பட்டன. கள்வர்கள் இருவரும் வண் டியைச் சுற்றி வணங்கி, இனி இத்தொழிலை விட்டு உழைத்து உண்பதாக உறுதி கூறிச் சென்றனர். (i) மற்றொரு முறை கடலூரிலிருந்து திரும்பும் போது குள்ளஞ்சாவடியில் தங்கினார். உடன் வந்த காவலர் துறையில் பணியாற்றும் இஸ்லாம் நண்பர் ஒருவர். வள்ளற் பெருமானுக்கு ஆடை ஒன்றினை அளிக்க அதனை அவர் உடுத்திக் கொண்டு குள்ளஞ்சா வடி சத்திரம் ஒன்றின் திண்ணையில் துயிலும்போது