பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 器 37 器 கள்ளன் ஒருவன் அவ்வாடையை உருவ முயன்றான். காவல் அன்பர் திருடனை அதட்டிப் பார்த்தார். அடிகள் அவரைச் சமாதானப்படுத்தி ஆடையை அக்கள்வ னுக்கு அளித்து களவுத் தொழிலை விட்டு விடுமாறு அறிவுரை கூறி அனுப்பினார். (ii) வள்ளற் பெருமான் சென்னையில் உறைந்த காலத்தில் ஒற்றியூரில் ஒரு சத்திரத்தில் உறங்கிய பொழுது கள்வன் ஒருவன் அவர் அணிந்திருந்த கடுக் கண்களைக் கழற்றினான். கற்றுவதை உணர்ந்தும் உறங்குவது போலிருந்துவிட்டு கழற்றுவதற்கு இடம் கொடுத்தார். அதன் பிறகு கடுக்கண்கள் அணிவதை விட்டுவிட்டார். - (12) புறவினத்தாரை அகவினத்தாராக மாற்றுதல்: (i) வடலூர் பறைச்சேரியில் சேரியின் தலைவனான அமாவாசை என்பானை அழைத்து இறந்த மாடுகளைத் தின்னாமல் புதைக்கும்படி அறுவுறுத்த அவனும் அதைக் கடைப்பிடித்தான். மீண்டும் அவனை அழைத்து எவ்வி தப் புலாலையும் உண்ண வேண்டா எனக் கட்டளை யிட்டார். சேரியில் தன் பங்கிற்கு வரும் மாமிசத்தையும் விட்டுவிட்டால் என்ன செய்வது, நாள்தோறும் செல வுக்கு அரை ரூபாய் வேண்டுமே என்று மயங்க, பெருமான் மஞ்சள் துணியில் அரை ரூபாய் நான யத்தை முடித்துக் கொடுத்து, இதனைப் பெட்டியில் வைத்துக் கொள். நாள்தோறும் எட்டனா வருமானம் கிடைக்கும்’ என்று அருளினார். அங்ங்னமே கிடைக் கவே அவனும் புலாலை முற்றிலும் நீக்கி அகவினம் சாாநதான, - (i) வடலூரில் இரண்டு படையாச்சி அன்பர்கள்; பெரிய குடும்பிகள். அவர்களை அழைத்து 'இன்று முதல் புலால் உண்ணாதீர்கள்; உங்கள் நிலத்தில் நெல் லும் அவுரியும் ஒன்றுக்கு ஐந்தாக விளையும்’ என்ற னர். அவர்களும் அதனை ஒப்புக் கொண்டு அறிவுரை