பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

箏 4Q 鄒 இராமலிங்க அடிகள் யோகஞ் செய்வர். இருபக்கத்திலும் இருப்புச் சட்டியில் சீமைக் கரி எரிந்து கொண்டிருப்பது வழக்கம். உலோகத் துண்டு ஒன்றையோ வெள்ளி நாணயம் ஒன்றையோ உள்ளங்கையில் வைத்து மூடித் திறந்தால் அவை உருகி ஒடும் அளவுக்கு அகச் சூடுஉடையவர் அடிகள். தீச்சட் டியினின்றும் நெருப்புத் துண்டுகள் சிதறி அடிகளின் மீது விழுந்தபோதும் அடிகளின் திருமேனிக்கு ஊறு நேரிடுவதில்லை. ஞானக் கனல் நிறைந்த அத்திரு மேனியை ஐம்பூதங்களில் ஒன்றாகிய தீக்கனல் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்பர் பெருமானை நீற்றறை ஒன்றும் செய்யாதிருத்தலுக்கு இதுவே காரணம். (3) பிறர் கண்ணுக்குத் தோன்றாது உறைதல்: மேட் டுக்குப்பத்தை உறைவிடமாகக் கெண்டபின் அடிகள் அவ்வப்போது உடலைப் பிறர்க்குத் தோன்றா வண் னம் மறைத்துக் கொண்டு அருவநிலையில் இருப்பு துண்டு. இத்தகைய சாதனைகளைத் தனித்திருந்து மேற் கொள்ளுவதற்காகவே அடிகள் வடலூரை விட்டு மேட் டுக் குப்பத்தை உறைவிடமாகக் கொண்டார்கள். (4) சத்தியஞான சபை அமைக்கப் பெற்ற வட லூர்க்கு அடிகள் 'உத்தரஞான சிதம்பரம் எனத் திருநாமம் இட்டனர். தில்லையை அடிகள் 'பூர்வஞான சிதம்பரம்’ என்பர். இரண்டும் ஞான சிதம்பரமே. முன்னைச் சிதம் பரம் தில்லை; பின்னைச் சிதம்பரம் வடலூர், 'உத்தர ஞான சிதம்பரம்’ என்னும் பெயர் திருவருளால் ஆக்கப் பெற்ற சிறப்புப் பெயர் என அடிகள் கூறுவர். (5) சத்திய ஞான சபை: உத்தரஞான சிதம்பரத்தில் அமைந்த சங்கம் சார் திருக்கோயிலுக்கு சத்திய ஞான சபை எனப் பெயரிட்டனர். அடிகள் தாம் நிறுவிய நிலையங்களுக்கு திருநாம் இடுவதே ஒரு தனிச் சிறப்பு. 'மடம்' என்னாது சங்கம்’ என்றதும், கோயில்’ என்