பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 42 泰 இராமலிங்க அடிகள் (ii) சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப் பம். (iv) சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப் பம். இவை நான்கும் சிறு விண்ணப்பம், பெரு விண்ணப்பம், ஞான விண்ணப்பம், சங்க விண்ணப்பம் என்று இவற் றின் பெயர்கள் சுருக்கமாக வழங்கப் பெறுகின்றன. 14 (8) சன்மார்க்கக் கொடி கொடி உண்மை: நமது நாபி முதல் புருவ மத்தி ஈறாக ஒரு நாடி உள்ளது; அந்த நாடியின் நுனியில் புருவ மத்தியில் ஒரு சவ்வு தொங்கு கிறது; அதன் அடிப்புறம் வெள்ளை நிறம்; மேற்புறம் மஞ்சள் நிறம். அச்சவ்வின்கீழ் ஒரு நரம்பு ஏறவும் இறங்கவும் உள்ளது; இக்கொடி நம் அநுபவத்தின் கண் விளங்கும். இவ்வடையாளக் குறிப்பதாகவே இன் றைய தினம் அடையாள நிறமான கொடி கட்டியது. விளக்கம்: நம் உடலினுள் நாபி (கொப்பூள்)யிலி ருந்து புருவ மத்தி வரை ஒரு நாடி உள்ளது. இந்த நாடியே கொடி மரம். இந்த நாடியின் நுனியில் புருவமத் தியில் ஒரு சவ்வு தொங்குகிறது. இந்தச் சவ்வே கொடி. அதன் அடிப்புறம் வெள்ளை, மேற்புறம் மஞ்சள் என்று அடிகள் கூறியுள்ளனர். அளவு கூறவில்லை. கொடியின் அகலத்தில் மூன்றில் ஒரு பங்கு வெள்ளை என்றும் சன்மார்க்கிகள் இப்போது வழங்கி வருகின்ற னர். இதற்கு ஆதாரம் அடிகளின் உபதேசக் குறிப்பில் இல்லை. (9) சித்தி வளாகத்தில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகள்: () ஒரு நாள் இறைவன் அம்மையோடும் இரட்டைக் 14. இவற்றின் விவரங்கட்கு ஊரன் அடிகள் வரைந்த 'இராமலிங்க அடிகள் திருவரலாறு பக்.461-478 காண்க.