பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 梁 43 米 குதிரை வண்டியில் அடிகள் இருக்கும் இடம் வந்தான். அப்போது அடிகள் அறையில் இருந்தனர். வெளியே யாரோ வருவதைக் கண்டதும் யாரோ எவரோ என்னும் அச்சுறுத்தலோடு உள்வாயில் தாழ்க்கோலைப் பற்றிய ராய் அறைக்குள் நின்றிருந்த அடிகளை 'வா என்று கையை அசைத்து இறைவன் அருள் செய்தான். இந்நி கழ்ச்சியை (-6. திருநடப்பு நிகழ்ச்சி - 4) என்ற பாடல் அகச்சான்றாகக் குறிப்பிடும். (ii) மேட்டுக் குப்பத்தில் அடிகள் உபதேசம் செய் யும் காலங்களில் முட ஆட்டுக் குட்டி ஒன்று அன்பர்க ளது கூட்டத்தில் தொலைவில் நின்று கண் இசையாது காதைச் சாய்த்துக் கொண்டு உபதேசங்களைக் கேட்டுக் கொண்டிருக்கும். கூட்டம் முடிந்து அன்பர்கள் சித்தி வளாகத்தை வலம் வருங்கால் ஆட்டுக் குட்டியும் முடக் காலோடு வலம் வரும். தமக்காக வரும் உணவை அடிகள் நொண்டி ஆட்டுக் குட்டிக்கும் முடவராகிய ஆசிரியர்க்கும் அளிப்பது வழக்கம். அடிகளது திருவுரு வப் படத்தில் பின்னணியாக அமைந்திருக்கும் சாலை, சபை, சித்தி வளாகம் ஆகியவற்றுடன் ஆட்டுக் குட்டி யையும் காணலாம். சித்தி வளாகத்தில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகள் அடிகளின் பாடல்களில் அகச்சான்றுகளாக அமைந்துள் ளன. விரிவஞ்சி அவை காட்டப் பெறவில்லை." அடிகள் சித்தி பெற்றது (இறைவனோடு இரண்டறக் கலந்தது 30.1.1874) (6) அடிகளைப் பற்றிய குறிப்புகள்: இவை அடிக ளின் அருட்பாவில் ஈடுபட்டு உள்ளத்தைப் பறிகொடுக் கும் அன்பர்கட்குப் பயன்படும். அடிகள் அவர்தம் உள்ளத்தில் காட்சி அளிப்பார்கள். 15. ஊரன் அடிகள் எழுதிய - இராமலிங்க அடிகள் திருவரலாறு பக்.504-548 STSVWS. -