பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 缘 45 塔 (i) திருவடி நிலைகள்: காலுக்குச் செருப்பு (மிதியடி) அணியும் பழக்கமுடையவர். (i) அடக்கம்: மிக்க அடக்கம் உடையவர். திருவுரு வப் படமே இதனைக் காட்டும். உயர்ந்த இருக்கையில் அமர்வதற்கு அஞ்சுவர். () சீவகாருண்ய உள்ளம்: சீவகாருண்யத்தின் திருவு ருவம். சீவகாருண்யமே அடிகளின் உயிர். எப்பொழு தும் எண்ணத்தில் வாழ்வது இப்பண்பு செயலிலும் காட்டுவது (பல பாடல்கள் - சான்றுகள்) - (v) கடவுள் ஒருவரே. உருவராகியும் அருவினராகி யும் உருஅருவராயும், ஒருவரே உளார் கடவுள்' (தனித் திரு அலங்கல் - 45). அருட்பெருஞ்சோதியே கடவுள். M) சிறு தெய்வ வழிபாடு கூடாது (6 அருள் விளக்க மாலை - 89). (i) உயிர்ப்பலி கூடாது (6 பிள்ளைப் பெருவிண் ணப்பம் - 63). - - (ii) சாதி சமய வேறுபாடுகள் கூடா (பல பாடல் கள்), - (x) எவ்வுயிரையும் தம் உயிர்போல எண்ணுதல் (பல பாடல்கள்), (x) வேத, ஆகம, சாத்திர, புராண இதிகாசங்கள் முடிவான உண்மையைத் தெளிவாக்க மாட்டா (பல பாடல்கள்).