பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 漆,49 懿 அளவாத பேரன்பு சொரிந்தருளை விளைவித்து, தளவாரும் நகையற்கண் தையல்இடங் கொண்டபிரான் வளமாரும் கழல்மலரோ டிரண்டறுத்து வாழ்விக்கும் உளவாலே அருட்பாஎன்று ஒருநாமம் பூண்டதுவே (35) என்ற இரு பாடல்களில் அழகாகக் கூறி மகிழ்வர். மூவர் முதலிகளின் அருளிச் செயல்கள் தேவாரம் எனப் பெயர் பெற்றன. மணிவாசகப் பெருமானின் அருளிச் செயல்கள் திருவாசகம் எனத் திருநாமம் பெற் றன. அருணகிரியாரின் அருட்பாடல்கள் திருப்புகழ் என்ற திருப்பெயர் பெற்றன. பட்டினத்தார், தாயுமா னார் அருளிய திருப்பாடல்கள் இவ்வாறு தனியாகச் சிறப்புப் பெயர் பெறாமல் அவற்றை அருளிய ஆசிரி யர்களின் பெயராலேயே பட்டினத்தார் பாடல் திரட் டு”, 'தாயுமானவர் பாடல் திரட்டு எனத் திருப்பெயர் பெற்றன. பிற்காலத்தில் குமரகுருபரர், சிவப்பிரகாசர் முதலியோர் பாடல்களும் அவர்கள் பெயராலேயே 'குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு 'சிவப்பிரகாச அடிகள் பிரபந்தத் திரட்டு என வழங்கலாயின. ஆனால், நம் பெருமானாகிய அடிகள் திருவாய் மலர்ந்த ருளிய திருப்பாடல்களின் தொகுப்போ திருவருட்பா' என்னும் ஒரு தனிச் சிறப்புப் பெயரைப் பெற்றது. இஃது அடிகளாரின் பெருமைக்கு ஒரு பெரிய சான்றாக அமைகின்றது. இனி, திருமுறைகளின் திருப்பாடல்க ளின் நயத்தை ஒவ்வொன்றாகக் காண்போம். இராம.-5