பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. முதல் திருமுறையின் பாடல்கள் இதில் 52 பதிகங்கள் உள்ளன. அவற்றுள் அடங்கிய பாடல்கள் 570. இவற்றுள் அடங்கிய அகத் துறைப் பதிகங்கள் நான்கு. இவற்றுள் அடங்கிய பாடல் கள் 42. இத்திருமுறையில் சில பதிகங்களையும் அவற் றுள் சில பாடல்களையும் காண்போம். . இனி சில பதிகங்களில் சில நயமான பாடல்களைக் காண்போம். எல்லாம் நயமானவைதாம். சோறு சுவை யாக இருக்கின்றதென்றால் பானை சோறு முழுவதை யும் உண்ணுதல் சாத்தியமா? - 1. தெய்வமணிமாலை: அடிகளால் முதன் முதலில் சென்னை கந்தகோட்டத்தில் பாடப் பெற்றது இதுவே. 31 பாடல்களைக் கொண்டது இப்பதிகம், பன்னிரு சீர்க்கழிநெடிலடி விருத்தத்தால் அமைந்தவை. இதன் முதற் பாடல்: திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள் திறலோங்கு செல்வம் ஓங்கச் .” செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம் திகழ்ந்தோங்க அருள்கொடுத்து மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க வளர்கருணை மயம்ஓங்கிஓர் வரம்.ஒங்கு தென்அமுத மயம்ஓங்கி ஆனந்த வடிவாகி ஓங்கிஞான உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்.மயில் ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்