பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் திருமுறையின் பாடல்கள் 拳 53 零

லடி ஆசிரிய விருத்தத்தில் ஆனவை. தெய்வமணி மாலையைப் போல் இதுவும் முதன் முதலாகக் கந்த கோட்டத்தில் பாடப் பெற்றதாகும். அருளார் அமுதே சரணம் சரணம் அழகா அமலா சரனம் சரணம் பொருள எனைஆள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் மருள்வார்க் கரியாய் சரணம் சரணம் மயில்வா கனனே சரணம் சரணம் கருனா லயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் என்பது முதற் பாடல். வேதப் பொருளே சரணம் சரணம் விண்னோர் பெருமான் சரணம் சரணம் போதத் திறனே சரணம் சரணம் புனைமா மயிலோய் சரணம் சரணம் நாதத் தொலியே சரணம் சரணம் நவைஇல் லவனே சரணம் சரணம் காதுக் கினிதாம் புகழோய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் (10) என்பது பத்தாம் பாடல். எல்லாப் பாடல்களும் இறைவன் திருவடியையே சரணம் என்கின்றன. அஃதாவது அடைக்கலம் புகுவதா கப் பேசுகின்றன. வைணவம் இதனைப் பிரபத்தி நெறி' (நம்மாழ்வார் கண்டது) என்கின்றது. திருவாசகத்தில் 'அடைக்கலப் பத்து’ என்பதில் மணிவாசகப் பெருமான் இதனையே பேசுகின்றார். கிறித்தவ சமயமும் இத னையே பறை சாற்றுகின்றது. அண்மைக் காலத்தில்