பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் திருமுறையின் பாடல்கள் 梁 55 球 மன்னே கலப மயில்மேல் அழகிய மாணிக்கமே. (4) வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும் விளங்குமயில் மேல்கொண்ட வீறும் மலர்முகம் ஆறும் விரைக்கமலக் கால்கொண்ட வீரக் கழலும்கண் டால்அன்றிக் காமன்எய்யும் கோல்கொண்ட வன்மை அறுமோ தணிகைக் குருபரனே. (11) உனக்கே விழைவுகொண்டு ஓலமிட்டு ஓங்கி உலறுகின்றேன் எனக்கே அருள்.இத் தமியேன் பிழைஉளத்து எண்ணியிடேல் புனக்கேழ் மணிவல்லி யைப்புணர்ந்து ஆண்டருள் புண்ணிய்னே மனக்கேத மாற்றும் தணிகா சலத்துஅமர் வானவனே. (13) என்செய்கை என்செய்கை எந்தாய்நின் பொன்னடிக் கேஅலங்கல் வன்செய்கை நீங்க மகிழ்ந்துஅணி யேன்துதி வாய்உரைக்க மென்செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்கத் தன்செய்கை என்பதற் றேதணி காசலம் சார்ந்திலனே. (23) தணியாத துன்பத் தடங்கடல் நீங்கநின் தன்மலர்த்தாள் பணியாத பாவிக்கு அருளும் உண் டோபசு பாசம்அற்றோர்க்கு