பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

锋 58 球 இராமலிங்க அடிகள் 12. பொறுக்காப் பத்து: பத்துப் பாடல்களைக கொண்ட இப்பதிகம் எழுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தது. பல குறைகளையெல் லாம் சொல்லி இத்தகைய குறையுள்ளவர் கூட்டத்தில் தாம் கலந்து கொள்வது பொறுக்கிலன் பொறுக்கிலன்' என்று கூறித் தணிகைவாழ் சரவணபவனிடம் முறை யிட்டுத் தம்மை அவனுடைய தொண்டர்பால் சேர்த்தி டத் திருவருள் புரியுமாறு வேண்டுவது இப்பதிகம். இதில் இரண்டு பாடல்கள்: நிலைஅருள் நினது மலர்அடிக் கன்பு நிகழ்ந்திட நாள்தொறும் நினையாப் புலையர்தம் இடம்.இப் புன்மையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் மலைஅர சளித்த மரகதக் கொம்பர் வருந்திான் றெடுத்தமா மணியே தலைஅர சளிக்க இந்திரன் புகழும் தணிகைவாழ் சரவண பவனே, (4) நீற்றணி விளங்கும் அவர்க்கருள் புரியும் நின்அடிக் கமலங்கள் நினைந்தே போற்றிடாதவர்பால் பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் ஆற்றல்கொள் நின்பொன் அடியருக் கடியன் ஆச்செயில் உய்குவன் அமுதே சாற்றிடும் பெருமைக் களவிலா தோங்கும் தணிகைவாழ் சரவண பவனே (8) இப்பதிகப் பாடல்களில் ஒவ்வொன்றின் இரண் டாம் அடியின் இறுதியில் பொறுக்கிலன் பொறுக்கி லன்' என்று கூறி வேண்டுவது நம் நெஞ்சை உருக்கு கின்றது. நம்மையும் அவ்வாறு அவனை வேண்டும் படித் தூண்டுகின்றது.