பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

寧 60 器 இராமலிங்க அடிகள் அற்புதமான பாடல்கள். ஆறெழுத்து மந்திரத்தை யும் வெண்ணிற்றின் பெருமையையும் வற்புறுத்திப் பேசுவன. 18. புன்மை நினைந்திரங்கல்: கட்டளைக் கலிப்பா யாப்பால் அமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது இப்பதிகம். பெண்களை இழிவுபடுத்திப் பேசுவதாக அமைந்தது. இதில் நான்கு பாடல்கள்: மஞ்சட் பூச்சின் மினுக்கில்இ ளைஞர்கள் மயங்க வேசெயும் வாள்விழி மாதர்பால் கெஞ்சிக் கொஞ்சி நிறைஅழித் துன்அருட் கிச்சை நீத்துக் கிடந்தனன் ஆயினேன் மஞ்சுற் றோங்கும் பொழில்தணி காசல வள்ளல் என்வினை மாற்றுதல் நீதியே தஞ்சத் தால்வந் தடைந்திடும் அன்பர்கள் தம்மைக் காக்கும் தனிஅருட் குன்றமே (1) முலையைக் காட்டி மயக்கிஎன் ஆருயிர் - முற்றிலும் வாங்குறும் முண்டைகள் நன்மதி குலையக் காட்டும் கலவிக் கிசைந்துநின் கோலங் காணக் குறிப்பிலன் ஆயினேன் நிலையைக் காட்டும்தல் ஆனந்த வெள்ளமே நேச நெஞ்சகம் நின்றொளிர் தீபமே கலையைக் காட்டும் மதிதவழ் நற்றணி காச லத்தமர்த் தோங்கதி காரனே. (2) பாவம் ஓர்உரு வாகிய பாவையர் பன்னு கண்வலைப் பட்டும யங்கியே கோவை வாய்இதழ்க் கிச்சைய தாகிநின் குரைக ழற்கன்பு கொண்டிலன் ஆயினேன் மேவு வார்வினை நீக்கிஅ ரித்திடும் வேல னேதணி காசல மேலனே தேவர் தேடரும் சீர்,அருட் செல்வனே தெய்வ யானை திருமண வானனே, (4)