பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V护 செய்யத் தொடங்கினார். சென்னை முத்தியாலுபேட்டை, லிங்கிச் செட்டித் தெருவில் அமைந்திருந்த சோமு செட்டியார் வீட்டிற்கு, தனது தமையனாருக்குப் பதிலாகச் சென்று, பெரிய புராணத்தில் பாயிரம் கடவுள் வாழ்த்துப் பாடலாகிய 'உலகெலாம்" என்று தொடங்கும் முதற் பாடலைப் பாடி, "உலகெலாம்" என்ற முதல் சொற்றொடருக்கு மட்டும், பல மணி நேரம் விளக்கம் அளித்தார் என்று அவரது வரலாறு கூறுகிறது. இந்த விளக்கத்தினை 'திரு அருட்பா - உரை நடைப்பகுதி" என்னும் நூலிலே 'உலகெலாம்" என்னும் மெய்ம்மொழிப் பொருள் விளக்கம் என்னும் தலைப்புடன் 85 பக்கங்களில் அச்சிடப்பட்டுள்ளது. (இரண்டாம் பதிப்பு 1981 - இராமலிங்க பணி மன்றம்) அதனை இன்றைக்குப் படித்தாலும் நமக்குப் பூரணமாகப் புரியவில்லை. 1832 ஆண்டு சோமு செட்டியார் வீட்டில் அமர்ந்து இருந்த மக்களுக்கு இது எந்த அளவுக்குப் புரிந்திருக்கும் என்பது தெரியாது. இருந்தாலும் இச்சொற்பொழிவு ஒரு அருளியல் உல கின் அற்புதம் என்பதைப் பற்றி ஐயமில்லை. இதற்கு அடுத்தபடியாக, சிதம்பரம் இராமலிங்கப் பிள்ளை என்ற பன்னிரண்டு வயது சிறுவன் சென்னை கந்தகோட்டம் என்னும் கோவிலில் நின்று கொண்டு இனிய எளிய தமிழில் முப்பத்தோரு கருத்துச் செறிவுமிக்கப் பாடல்களைப் பாடினான். இப்பாடல்களே இன்றைக்கு தெய்வமணி மாலை என்ற பெயரில் விளங்கி வருகின்றன. இப்பாடல்கள் ஒவ்வொன்றின் இறுதியி லும், மகுடமாக "தருமமிகு சென்யிைல் கந்தகோட்டத்துள் வளர், தலமோங்கு கந்தவேளே, தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே' என்பது அமைந்திருக்கும். (தருமமிகு என்பதற்குப் பதில் பல்வேறு அடை மொழியும் இருக்கும்) இவ்வாறு மகுடம் அமைத்துப் பாடும் திறமை பன்னி ரண்டு வயது சிறுவனுக்கு எப்படி வந்தது? தெய்வ அருளே என்று கூறுவதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்? இந்தத் தெய்வப் பிறவி வளர்ந்து ஐம்பது ஆண்டுகாலம் வாழ்ந்து, பல அற்புதங்களை எல்லாம் நிகழ்த்தி, ஆறாயிரம்