பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹 66 零 இராமலிங்க அடிகள் நாத வடிவுகொள் நீதனடி - பர நாதங் கடந்த நலத்தனடி (8) பக்தி மீதூர்ந்து நின்றால் சும்மா விடாது துள்ளிக் குதித்தாடச் செய்யும்; கும்மி கொட்டிக் குதிக்கச் செய் யும். பின் என்னென்னவோ செய்யும். 51. சண்முகர் வருகை: இது பன்னிரண்டு சிந்துப் பாடல்களைக் கொண்டது. சிந்து என்றாலே அண்ணா மலை ரெட்டியார் காவடிச் சிந்தை நினைக்கச் செய்யும். வாரும் வாரும்தெய்வ வடிவேல் முருகன் வள்ளி மணாளரே வாரும் புள்ளி மயிலோரே வாரும். (1) பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று பொன்னான வேலரே வாரும் மின்னார்முந் நூலரே வாரும் (3) அருணன் உதித்தனன் அன்பர்கள் குழ்ந்தனர் ஆறுமுகத் தோரே வாரும் மாறில்அகத் தோரே வாரும் (6) பக்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர் பன்னிரு தோளரே வாரும் பொன்மலர்த் தாளரே வாரும் (10) தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர் சுப்பிர மணியரே வாரும் . வைப்பின் அணியரே வாரும் (12) ஆடிப்பாடி மகிழ வேண்டிய பாடல்கள். கூட்டமாகக் கூடியாடினால் பின்னும் சிறக்கும்.