பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் திருமுறையின் பாடல்கள் 崇 67 镑 அகத்துறைப் பதிகங்கள் நான்கை முன்னர்க் குறிப்பிட்டேன். அவை: 20. ஆற்றாவிரகம் 37. கூடல் விழைதல் 41. பவனிச் செருக்கு 47. இங்கிதப் பத்து என்பவையாகும். - 20. ஆற்றா விரகம்: அடிகள் தணிகைமலை கந்த வேளின்மீது ஆராக் காதல் விரகம் மேலிட்டுத் தலைவி கூற்றாக அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப் பில் அமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது இப்ப திகம். சில பாடல்களில் ஆழங்கால் பட்டு நாமும் தலைவி நிலையில் பாவனை செய்ய முயல்வோம். எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக் கிரங்கும் விருப்பாரோ அளியேன் பேர்நெஞ் சிருப்பாரோ அழியாக் காமம் திருப்பாரோ களியேன் என்னை உருப்பாரோ கருதும் அருட்குக் கருப்பாரோ தெளியேன் யான்என் செய்கேனே தென்பால் தணிகைப் பொருப்பாரே (2) வந்தென் எதிரில் நில்லாரோ மகிழ ஒருசொல் சொல்லாரோ முந்தம் மதனை வெல்லாரோ மோகம திரப் புல்லாரோ கந்தன் எனும்பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ சந்தத் தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம் வல்லாரோ (4)