பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் திருமுறையின் பாடல்கள் 岑 69 来 முகம்ஆ றுடையார் முகம்மாறுடையார் எனவே எனது முன்வந்தார் அகமா ருடையேன் பதியாது என்றேன் அலைவாய் என்றார் அஃதென்னே (1) காயோ டுடனாய்க் கனல்கை ஏந்திக் காடே இடமாக் கணங்கொண்ட பேயோ டாடிப் பலிதேர் தரும்ஒர் பித்தப் பெருமான் திருமகனார் தாயோ டுறளும் தணிகா சலனார் கைசேர் மயிலார் தனிவேலார் வேயோ டுறழ்தோள் பாவையர் முன்என் வெள்வளை கொண்டார் வின்வாமே. (3) கல்லால் அடியார் கல்லடி உண்டார் கண்டார் உலகம் களைவேதம் செல்லா நெறியார் செல்லுறும் முடியார் சிவனார் அருமைத் திருமகனார் எல்லாம் உடையார் தணிகா சலனார் என்நாயகனார் இயல்வேலார் நல்லார் இடைஎன் வெள்வளை கொடுபின் நண்ணார் மயில்மேல் நடந்தாரே (5) மழுவார் தருகைப் பெருமான் மகனார் மயில்வா கனனார் அயில்வேலார் தழுவார் வினையைத் தணியார் அணியார் தணிகா சலனார் தம்பாதம் - தொழுவார் அழுவார் விழுவார் எழுவார் துதியா நிற்பார் அவர்நிற்கப் புழுவார் உடலோம் பிடும்என் முனர்வந் தருள்தந் தருளிப் போனாரே (8) பாடல்களை உள்நெகிழ்ந்து பாடி அநுபவித்தால் நாமும் அடிகள் கொண்ட தலைவி நிலையை அடைய லாம். 41. பவனிச் செருக்கு ஆறுமுகப் பெருமான் மயில் மீது உலா வரும்போது அதனைக் கண்ட அடிகள்