பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vji தெய்வீகப் பாடல்களை இயற்றி, பல புதிய தத்துவங்களை இவ்வுலகுக்கு அறிவுறுத்தி, இறுதியாக வடலூரை அடுத்த மேட் டுக் குப்பம் என்னுமிடத்தில் அருட்பெருஞ் ஜோதி இறைவனு டன் கலந்தது. உடல் மண்ணுக்கோ, நெருப்புக்கோ தரப்பட வில்லை. இதுவும் ஒரு மாபெரும் அற்புதமே. துரதிர்ஷ்டவசமாக, வள்ளற்பெருமானது மிக உயர்ந்த கருத்து களை, இன்றைக்கும் மிகமிக தேவைப்படும் கருத்துகளை, அவர் வாழ்ந்த காலத்தில் புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. இன் றைக்கும் அதே நிலைதான். அவரை இன்றைக்கு சரிவரப் புரிந்து கொண்ட வெகு சிலரில், பேராசிரியர் டாக்டர் ந.சுப்புரெட்டியார் ஒருவர். இல்லாவிட்டால் தனது 88வது வயதில், 350 பக்கங்கள் கொண்ட ஒரு நூலினை, 'இராமலிங்க அடிகள் என்ற தலைப்பு டன் எழுதி வெளியிட முன் வருவாரா? அவருக்குச் சைவ உலகமும் சன்மார்க்க உலகமும் பெரிதும் கடப்பாடு உடையன ஆகும். - . . சைவ சித்தாந்திகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் சிலர், வள்ளற் பெருமானை சரிவர புரிந்து கொள்ளாமல் அல்லல்ப டுகின்றனர். அவரைப் போன்ற சிறந்த சைவ அருளாளர் வேறு யாரும் இல்லை என்றும் கூடக் கூறலாம். சமயகுரவர் நால்வரைப் பற்றிய அருண்மாலையை ஊன்றிப் படித்தால், அவர் எவ்வளவு தூரம் நால்வரை அனுபவித்திருக்கிறார் என்பது புரியும். தேவாரப் பாடல் பெற்றத் தலங்கள் 274. இந்த 274 தலங்களின் சிறப்பினை யும், ஒரே பாடலில் அமைத்து "விண்ணப்பக் கலிவெண்பா' பாடியதைப் போல வேறு அருளாளர்கள் யாராவது பாடியுள்ளனரா? அவரது இறுதிக்காலம் வரை சிவசிவ நடராஜா என்றுதான் பாடியிருக்கிறார். இதனை எல்லாம் சிந்தியாமல் வள்ளலாரைப் புறக்கணிப்பது சைவ உலகத்திற்கு நல்லதல்ல. வள்ளற்பெருமானது சமய சமரசக் கொள்கையும் ஒளிவழி பாடும், சாதி சமய சழக்கினை விடவேண்டும் என்ற கருத்தும் இன்றைய சமூகத்திற்கு மிகவும் அவசியமானவை ஆகும். தமிழ ராகிய நாம் வள்ளற் பெருமானது சமரசத்தையும், சீவகாருண்யத் தையும் நாடெங்கும் பரப்பத் தவறியதால்தான், நாட்டில்